"தமிழகத்திற்கு மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு?" : வதந்தியை நம்பி கொதித்தெழுந்த கன்னட அமைப்பினர்

மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்தி கர்நாடகாவில் புயலை கிளப்பியிருக்கிறது.
தமிழகத்திற்கு மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு? : வதந்தியை நம்பி கொதித்தெழுந்த கன்னட அமைப்பினர்
x
மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்தி கர்நாடகாவில் புயலை கிளப்பியிருக்கிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் மைசூர்பாகுவை எல்லையில் மறித்து சாப்பிடுவோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

மைசூர் பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டதாக சமூக வலைதளமான டுவிட்டரில் செய்தி ஒன்று வெளியாகிறது. அவ்வளவு தான்... என்ன....  ஏது என விசாரிக்காத கன்னட அமைப்பினர் இந்த தகவலை கேட்டு கொதித்தெழுந்திருக்கிறார்கள். 

நடந்தது என்ன தெரியுமா...?

ஆனந்த் ரங்கநாதன் என்பவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மைசூர்பாக் வழங்குவது போன்ற புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மைசூர்பாக்கிற்னாக புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கியது நன்றி என அதில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விஷயம் தீயாக பரவ, மைசூருக்கு சொந்தமான இனிப்பு பண்டத்தை தமிழகத்திற்கு தாரை வார்ப்பதா என ஆவேசமாக பேச தொடங்கி யிருக்கிறார்கள். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைந்த கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ், மைசூர்பாகு தங்களுடையது என கொண்டாடும் உரிமை தமிழகத்திற்கு இல்லை என்றும், தமிழ்நாட்டில் நல்ல கடலை மாவு மற்றும் நெய் கிடைக்காது என்றும் கூறியிருக்கிறார். 

அதிகபட்ச கோபத்தில் அவர் என்ன சொன்னார் தெரியுமா...?

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மைசூர்பாக்கை கொண்டு செல்ல முடியாத வகையில் தடுப்போம் என்ற அவர், அப்படி மீறி கொண்டு செல்லப்பட்டால் மாநில எல்லையில் மைசூர்பாக்கை தடுத்து நாங்களே சாப்பிட்டு விடுவோம் என கூறியிருக்கிறார். 

கொஞ்சம் அதிகமாகவே கொதித்து போன வாட்டாள் நாகராஜ், காவிரி, மேகதாதுவில் அமைதி காத்தது போல், மைசூர் பாகு விஷயத்தில் இருக்க மாட்டோம் என கூறியிருக்கிறார். ஆவேசம் இப்படி இருக்க, வதந்தியை கிளப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்