ஜீவசமாதி நாடகம் : இருளப்ப சாமி மீது வழக்கு விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

உண்டியல் வைத்து, பணம் வசூலித்த "ஜீவசமாதி" சாமியார் இருளப்பசாமி உள்பட 7 பேர் மீது, போலீசார் 4 பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜீவசமாதி நாடகம் : இருளப்ப சாமி மீது வழக்கு விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்
x
உண்டியல் வைத்து, பணம் வசூலித்த "ஜீவசமாதி" சாமியார் இருளப்பசாமி உள்பட 7 பேர் மீது, போலீசார் 4 பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளனர்.  3 மணி நேரம் நீடித்த விசாரணையின் முடிவில், சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 3 பேர், அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை என்ற கிராமம் -  நிமிடத்திற்கு நிமிடம் எகிறியது, பரபரப்பு. 77 வயது இருளப்ப சாமி என்பவர், ஜீவசமாதி அடைய போவதாக அறிவித்ததால், கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, பதற்றம் தணியாமல், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இருளப்ப சாமி, 
அதிகாலையில் தனது நாடகத்தை முடித்துக்கொண்டு, வசூலான உண்டியல் பணத்துடன் வீடு திரும்பினார்.

பெரும் சர்ச்சையை உருவாக்கிய ஜீவசமாதி நாடகம்,
"உதயகீதம்" திரைப்படத்தில் வரும், கவுண்டமணி காட்சி போல இடம் பெற்றிருந்ததாக பக்தர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கிடையே, இருளப்பசாமி, பக்தர்களிடம் பண வசூல் வேட்டை நடத்தவே, ஜீவசமாதி நாடகம் ஆடியதாக மோசடி புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, இருளப்பசாமி, அவரது மகன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பணப்பை மற்றும் வசூலுக்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை கைப்பற்றினர்.  கண்ணை மூடிக்கொண்டு, மரத்தடியில் தியானம் செய்து வரும் இருளப்ப சாமியை மட்டும் விட்டு விட்டு, எஞ்சிய 6 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

எனவே, கண்ணை திறந்து, தியானத்தை நிறைவு செய்தால் மட்டுமே, இருளப்ப சாமியின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வரும்.

Next Story

மேலும் செய்திகள்