"மின்கம்பம் முறிந்து விழுந்து விபரீதம் - ஒருவர் பலி"
சிறுவன் தீனா உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள், தாம்பரம் அருகே தெரு நாய்களுக்கு உணவு அளிக்க சென்றவர் சேதம் அடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்தார்.
தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கத்தை சேர்ந்த சேதுராஜன் என்பவர், இரவு உணவை முடித்து விட்டு மீதமுள்ள உணவை தெரு நாய்களுக்கு வைப்பதற்காக வெளியே சென்றுள்ளார். வீட்டுக்கு வெளியே இருந்த மின்கம்பம் அருகே உணவை வைத்தபோது, சேதம் அடைந்த மின்கம்பம் முறிந்து சேதுராஜன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதால் படுகாயம் அடைந்த சேதுராஜனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி சேதுராஜன் உயிரிழந்தார்.
Next Story