மின்சார வாகன கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர்

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும் என மின்சார வாகனம் தொடர்பான கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
x
சென்னை தலைமை செயலகத்தில் இன்று, தமிழக அரசின் மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் 30 முதல் 35 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மின்சார வாகன கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் ஏற்கனவே பல்வேறு சலுகைகள், வரி குறைப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும் என்று கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு முதல்கட்டமாக மின்சாரத்தால் இயங்கும் 525 பேருந்துகளை இயக்க உள்ளது. இந்த வாகனங்களின் விலையில், அதன் பேட்டரிக்கான விலை மட்டுமே சுமார் 50 சதவீதம் உள்ளது. 
நவீனத் தொழில்நுட்பம், அதிக உற்பத்தி, அரசின் சலுகைகள் போன்றவற்றால் இதன் விலை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்