"விபத்திற்கு பேனர் காரணம் இல்லை என சொல்வதா?" - சுபஸ்ரீ தாயார் கீதா வேதனை

"வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பேசுவதா?"
x
விபத்திற்கு பேனர் காரணம் இல்லை என சொல்லி, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா...? என சுபஸ்ரீயின் தாயார் கீதா தெரிவித்துள்ளார். 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வந்திருந்தால், சுப​ஸ்ரீயை காப்பாற்றியிருக்க முடியும் என்றார். போக்குவரத்து விதிப்படி, சுபஸ்ரீ தலைக்கவசம் அணிந்து மிதமான வேகத்தில் சென்றதாக குறிப்பிட்ட கீதா, விபத்திற்கு காரணம் பேனர் தான் என்றார். விபத்திற்கு காரணம் பேனர் இல்லை என்று கூறுவது தங்களுக்கு மிகுந்த மன வேதனை தருவதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்