பால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.
x
* ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது. வரும் புதன்கிழமை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

* ஒரு லிட்டர் 460 ரூபாயாக இருந்த நெய், தற்போது 30 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளது.

* 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ  பால் பவுடர், 
50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு, இனி 320 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது.

* 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பனீர், இனி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

* ஆவின் வெண்ணெய் அரை கிலோ   230 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 10 ரூபாய் உயர்த்தப்பட்டு  240 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

* ஆவின் பால்கோவா ஒரு கிலோ 500 ரூபாயிலிருந்து 20 ரூபாய் உயர்த்தப்பட்டு  520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

* ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் 26 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 30 ரூபாயாக விற்பனையாக உள்ளது.

* 22  ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் நறுமண பால் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், இனிமேல் 25  ரூபாய்க்கு விற்பனையாகும்.

* அரை லிட்டர் தயிர் 25 ரூபாயில் இருந்து 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 27 ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்