கோவை : பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த இளைஞர் சிக்கினார்

கோவையில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
x
கோவையில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தீவிரவாத தொடர்புடைய செயல்கள் தமிழகத்தில் நடைபெற்று வருவது பீதியை கிளப்பி வருகிறது. தொடர்ச்சியாக பலர் கைதும் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கோவையில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பாருக் கவுசீர் என்ற இளைஞர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். நகைப்பட்டறையில் வேலை பார்த்து வந்த பாருக், வங்க தேசத்தை சேர்ந்தவர். பாருக் செல்போன் பழுது பார்க்க சென்ற போது, சிக்கியதாக கூறப்படுகிறது. இவர் பாகிஸ்தானில் செயல்படும் குழு ஒன்றி முகத்திரையை வாட்ஸ் ஆப்பில் வைத்திருந்ததாகவும், செல்போனில் சில துப்பாக்கிகளின் புகைப்படங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்