பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் - ஸ்டாலின்

பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
x
பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.  சென்னையில் பேனர் விழுந்த விபத்தில், இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அறிக்கை  வெளியிட்டுள்ள அவர், பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார். அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளதுடன், அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்