சாலை போடப்பட்ட 10 நாளில் சேதம் : மக்கள் அதிர்ச்சி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல் கிணறு கிராமத்தில் அவசரகதியில் போடப்பட்ட தார் சாலை, பத்தே நாளில் சேதமடைந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சாலை போடப்பட்ட 10 நாளில் சேதம் : மக்கள் அதிர்ச்சி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல் கிணறு கிராமத்தில் அவசரகதியில் போடப்பட்ட தார் சாலை, பத்தே நாளில் சேதமடைந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். காவல்கிணறு ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் மற்றும் கிறிஸ்து நகர் பகுதிகளில் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாலை போடும் பணி அவசரகதியில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சாலை குண்டு குழியுமாக, கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கிறது. பத்து நாட்களிலேயே சாலை சேதமடைந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள், தரமான சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்