பட்டுக்கோட்டை அரசுப் பள்ளிக்கு பணியிட மாற்றம் : மனஉளைச்சலில் மாரடைப்பால் ஆசிரியர் மரணம்?

தஞ்சை மாவட்டம் திருபுவனம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த லதா என்பவர் 10 நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
பட்டுக்கோட்டை அரசுப் பள்ளிக்கு பணியிட மாற்றம் : மனஉளைச்சலில் மாரடைப்பால் ஆசிரியர் மரணம்?
x
தஞ்சை மாவட்டம் திருபுவனம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த லதா என்பவர் 10 நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதனால் ஆசிரியை லதா மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், நேற்று மாலை பள்ளி விட்டு வீடு திரும்பிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பணியிட மாறுதல் ஆணை, ஆசிரியரின் உயிரை பறித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்