தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகம்,  புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக காஞ்சிபுரம்,வேலூர், தஞ்சாவூர்,  நீலகிரி, கோவை, தேனி, காரைக்கால் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் எனவும் கூறியுள்ளது. சென்னை பொறுத்தவரை  மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், காரைக்கால் அருகே கீழடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்