கோழித் தீவன ஆலையை மூட வலியுறுத்தி திருவள்ளூரில் மக்கள் போராட்டம்

கோழித் தீவன ஆலையை மூட வலியுறுத்தி திருவள்ளூரில் மக்கள் போராட்டம்
x
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள கோழி தீவன ஆலை புற்று நோய் உண்டாக்குவதாக குற்றம்சாட்டி முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் அதை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பண்டிக்காவனூரில் செயல்படும் கோழி தீவன ஆலை பல்வேறு ரசாயனங்களை சேர்ப்பதாகவும் அதன் மூலம் வெளியேறும் தூசு மற்றும் நச்சுகள் காற்றில் கலந்து பல்வேறு நோய்களை உண்டாவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். கர்ப்ப பைகளில் கோளாறு, ரத்த புற்று நோய், ஆஸ்துமா, சொல்ல முடியாத ஒவ்வாமை உள்ளிட்ட நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டிய அவர்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்