தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரம் - 1,098 பேருக்கு, தலா ரூ.1,000 அபராதம் விதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற ஆயிரத்து 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரம் - 1,098 பேருக்கு, தலா ரூ.1,000 அபராதம் விதிப்பு
x
தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற ஆயிரத்து 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அடுத்து, தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் அவர்களின் உத்தரவின் பேரில், காவல் துறையினர் பல்வேறு முக்கிய சாலைகளில் நேற்று காலை முதல் மாலை வரை சோதனை செய்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய பின், அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் 1098 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இ-செலான் மூலம் வசூல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்