கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி : கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதல்
பதிவு : செப்டம்பர் 10, 2019, 07:43 AM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த  டிப்பர் லாரி,  அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கண்டரக்கோட்டை பெண்ணையாற்று அரசு மணல் குவாரியிலிந்து மணல் ஏற்றிய ஒரு டிப்பர் லாரி,  பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த கூலித்தொழிலாளி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் எதிரில் வந்த கார் மீது மோதியது.இதில் கார் லாரியில் சிக்கியபடியே இழுத்து செல்லப்பட்டது. மேலும் சிக்னலுக்காக காத்திருந்த இரு சக்கர வாகனங்கள் மீதும் லாரி மோதியது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். பின்னர் லாரி நின்றதும் பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்த ஓட்டுனர் காமராஜ் மீட்கப்பட்டார். 

பிற செய்திகள்

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா"

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

33 views

செங்கல்பட்டில் 20 நாளில் 827 பேருக்கு கொரோனா

சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து ஐநூறை தாண்டி உள்ளது.

47 views

ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.

161 views

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

148 views

சமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி

சமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.

51 views

99 வயது பாட்டியின் கொரோனா கால உதவி...

முதியவர்கள் எல்லோரும் கொரோனா வைரஸிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

85 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.