மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த ஆவணி மூலத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா
x
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிவனின் திருவிளையாடலை மையமாகக் கொண்டு நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று கோலாகலமாக நடைபெற்றது. சுவாமி வேடமணிந்த பட்டரும், மன்னர் வேடமணிந்த பட்டரும் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வை நடத்திக் காட்டினர்.  இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக பிட்டு வழங்கப்பட்டது. நிகழ்வை காண பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்