தமிழிசையை மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கலாம் - புதுக்கோட்டையில் திருமாவளவன் பேட்டி

தமிழிசையை மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கலாம்,ஓய்வு கொடுப்பது போல ஆளுநராக்கியது ஏன் என தெரியவில்லை - புதுக்கோட்டையில் திருமாவளவன் பேட்டி
x
ப.சிதம்பரத்தை போலவே  ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என பாஜக தலைவர்கள் கூறி வருவது  அவர்களுடைய ஆசையாக இருக்கலாம் என்றும் ஆனால் அந்த ஆசை நிறைவேறாது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். தமிழிசையை மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கலாம் என்றும் அவருக்கு ஓய்வு கொடுப்பது போல ஆளுநராக்கியது ஏன் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்