தாராபுரம் : 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - கட்டட தொழிலாளி கைது

தாராபுரம் அருகே 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளியை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்  : 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - கட்டட தொழிலாளி கைது
x
தாராபுரம் அருகே 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளியை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொட்டிக்காம்பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை, சித்தாள் வேலைக்கு என்று கூறி கட்டட தொழிலாளி சுப்பிரமணி என்பவர் அழைத்து சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் தாய், தாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சிறுமியை மீட்ட போலீசார், விசாரித்ததில் சுப்பிரமணி வேலைக்கு என அழைத்து சென்று, திருமணம் செய்தவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சுப்பிரமணியை கைது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்