நெல்லை : அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து : 2 பேர் பலி

நெல்லை ரெட்டியார்பட்டியில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை : அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து : 2 பேர் பலி
x
நெல்லை ரெட்டியார்பட்டியில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரெட்டியார்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம், தனது கிரஹபிரவேச விழாவிற்காக பொருட்கள் வாங்க, நண்பர் நேகவியா என்பவருடன் அதிகாலையில் காரில் சென்றுள்ளார். அப்போது கார், ஈரோட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற விரைவு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. கார் முழுவதும் சேதமடைந்த நிலையில், நேகவியா மற்றும் சோமசுந்தரம் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.   

Next Story

மேலும் செய்திகள்