தெலங்கானா ஆளுநராக தமிழிசை இன்று பதவி ஏற்பு

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.
x
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்கவுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் காலை 11 மணி அளவில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான், தமிழிசை சவுந்தர ராஜனுக்கு பதவி பிரமானம் செய்து வைக்கிறார். தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழுக்கும் தெலுங்குக்கும் ஒரு பாலமாக இருப்பேன் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்