முக்கொம்பு அணையை தீவிரமான கண்காணிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

முக்கொம்பு அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அணையை தீவிரமான கண்காணிக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கொம்பு அணையை தீவிரமான கண்காணிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
x
முக்கொம்பு அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், அணையை தீவிரமான கண்காணிக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திருப்பூர் மாவட்டம், உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடக மாநிலத்தில் பெய்யும் கனமழையால், மேட்டூர் அணை  முழு கொள்ளவை எட்டியுள்ளதாகவும், அங்கிருந்து அதிகமான நீர் வெளியேற்றப்படுவதால், முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் கூறினார். இதனால் அணையின் மதகுகளுக்கு பாதிப்பில்லாத வகையில் பொதுப் பணித்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் ஜி.கே வாசன் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்