இளைஞரை துப்பாக்கியால் சுட்டதாக புகார், அ.தி.மு.க நிர்வாகியின் மகன் மீது வழக்கு

புதுக்கோட்டை அருகே நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டதாக புகார் கூறப்பட்ட விவகாரத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரை துப்பாக்கியால் சுட்டதாக புகார், அ.தி.மு.க நிர்வாகியின் மகன் மீது வழக்கு
x
கீரமங்கலம் அடுத்த சேந்தன்குடியை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி தனசேகரனின் மகன் விமலும், அதே  பகுதியைச் சேர்ந்த சுரேசுக்கும் இடையே நில தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த விமல், தனது ஓட்டுநர் ராஜராஜன் உதவியுடன், சுரேஷை தாக்க முயன்றுள்ளார். அங்கிருந்து சுரேஷ் தப்பி ஓடிய திசையை நோக்கி அ.தி.மு.க நிர்வாகியின் மகன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். குண்டடி படாமல் உயிர் தப்பிய இளைஞர், கீரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக அ.தி.மு.க நிர்வாகியின் மகன் உள்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஓட்டுநர் ராஜராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விமலை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்