"ஆன்லைன் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட் புக்கிங்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் எடுக்கும் முறை படிப்படியாக கொண்டுவரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
x
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் எடுக்கும் முறை படிப்படியாக கொண்டுவரப்படும் என்று அமைச்சர்  கடம்பூர் ராஜூ கூறினார். இது தொடர்பாக, தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் டிக்கெட் நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வராது என்று விளக்கம் அளித்தார். முதற்கட்டமாக, சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்னர் படிப்படியாக நகராட்சி, பேரூராட்சி திரையரங்குகளில் நடைமுறைக்கு வரும் என்று கூறினார். இதற்காக அரசு சார்பில் செயலி உருவாக்கப்படும் என்றும், தியேட்டர்களின் நிலைக்கு ஏற்ப கட்டண விகிதம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்