பேருந்து நடத்துனர் - தெலுங்கானா கபடி வீரர்கள் இடையே மோதல்

சென்னை எழும்பூர் பேருந்து நிறுத்தத்தில், நடத்துனர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் இடையே, நிகழ்ந்த மோதலால், பரபரப்பு ஏற்பட்டது.
x
சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரியார் நகர் வரை சென்ற 29 ஏ, மாநகர பேருந்தில்,  தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் பயணம் செய்தனர். அப்போது, பேருந்து நடத்துனல் வில்சனுக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான லட்சுமணனுக்கும் டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இது கடும் வாக்குவாதமாக மாறி பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, எழும்பூரில் நின்றதும் தெலுங்கானா விளையாட்டு வீரர்களுக்கும், நடத்துனருக்கும் இடையே கைகலப்பு நிகழ்ந்தது. இது குறித்து தகவல் கிடைத்த மற்ற பேருந்து ஓட்டுநர்கள் வரிசையாக பேருந்தை நிறுத்தி நடத்தருக்கு ஆதரவாக சாலையில்  இறங்கி‌ தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களை தாக்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துக்காக காத்து நின்ற பொதுமக்களும் சிதறி ஓட ஆரம்பித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 5 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த மோதல் காரணமாக எழும்பூர் பேருந்து நிறுத்தம் அருகே கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்