"தவறான பொருளாதார கொள்கையே வீழ்ச்சிக்கு காரணம்" - தயாநிதிமாறன்

தவறான பொருளாதார கொள்கையே, இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என திமுக எம்பி தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
தவறான பொருளாதார கொள்கையே வீழ்ச்சிக்கு காரணம் - தயாநிதிமாறன்
x
தவறான பொருளாதார கொள்கையே, இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என திமுக எம்பி தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் குழந்தைப்பேறு பெற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, வெளிநாடு சென்றிருக்கும் முதலமைச்சர் என்ன முதலீடு கொண்டு வருகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்