போடாத சாலைக்கு ரூ. 24 லட்சம் செலவு : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமான உண்மை

போடாத சாலைக்கு 24 லட்சம் ரூபாய் செலவானதாக மதுரை மாநகராட்சி கணக்கு காட்டியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
x
மதுரை இந்தியன் குரல் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் என்பவர் அங்குள்ள சத்திய சாய் நகரில் இறுதியாக சாலை எப்போது போடப்பட்டது என தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு அவர் கேட்டபோது, 2008 ஆம் ஆண்டு இறுதியாக சாலை போடப்பட்டதாகவும், அதன் பின் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது. அதே கேள்வியை தற்போது மோகன் மீண்டும் எழுப்பிய நிலையில், 2012 ஆம் ஆண்டு சாலை போடப்பட்டதாகவும், அதற்கு 24 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2012 ஆம் ஆண்டில் சாலை போடாமலே மதுரை மாநகராட்சி 24 புள்ளி 70 லட்சம் ரூபாய் கணக்கு காட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்