தமது மணிவிழா நிகழ்ச்சி குறித்து நினைவு கூர்ந்த ஸ்டாலின்

மணிவிழா என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்தார்.
x
மணிவிழா என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் கட்சி நிர்வாகியின் மணிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்த மணிவிழா நிகழ்ச்சியை பார்க்கும் போது, ஆறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தமது மணிவிழா நிகழ்ச்சி ஞாபகம் வருவதாக கூறினார். தொடர்ந்து மணிவிழா தம்பதிகளை வாழ்த்திப் பேசிய ஸ்டாலின், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்திய அவர், பதினாறு செல்வங்களையும் பட்டியலிட்டு வாழ்த்தியது திமுகவினர் உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்