செப்.2-ல் விநாயகர் சதுர்த்தி விழா: "செங்கோட்டையில் 144 - ஆலோசித்து முடிவு" - மாவட்ட எஸ்.பி. தகவல்

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் தெரிவித்தார்.
x
நெல்லை மாவட்டம் சிவகிரி அடுத்துள்ள நெல்கட்டும் செவலில், பூலித்தேவன் பிறந்தநாள் விழா, வருகிற 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் வெளியிட்டார். நெல்லை பாளையங்கோட்டையில் காவலர் தேர்வு மையத்தை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்