ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு  எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், மற்றும் கோபண்ணா உள்ளிட்டோர் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்