"சமூக வலைதளம் - ஆதார் எண் கட்டாயம் குறித்து விசாரிக்கவில்லை" - சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

சமூக வலைதள கணக்கு துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் கோரிக்கை குறித்து விசாரிக்கவில்லை எனவும், ஆன்லைன் குற்றங்களை தடுப்பது குறித்து மட்டுமே விசாரிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளம் - ஆதார் எண் கட்டாயம் குறித்து விசாரிக்கவில்லை - சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்
x
சமூக வலைதள கணக்கு துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் கோரிக்கை குறித்து விசாரிக்கவில்லை எனவும், ஆன்லைன் குற்றங்களை தடுப்பது  குறித்து மட்டுமே விசாரிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. 

ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விசாரிக்கவில்லை என்று தெரிவித்தது. மேலும் ஆன்லைன் குற்றங்களை தடுப்பது  குறித்து மட்டுமே விசாரித்து வருவதாகவும் விளக்கமளித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 19 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்