"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
x
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாளை யொட்டி, சென்னை சின்னமலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்