நீலகிரியில் மீண்டும் கனமழை : "மக்கள் அச்சப்பட தேவையில்லை " - இன்னோசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டம் ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, நடுவட்டம், கூடலூர், தேவாலா, குன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.
x
நீலகிரி மாவட்டம் ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, நடுவட்டம், கூடலூர், தேவாலா, குன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில்,  மாவட்டத்தில் நான்கு முகாம்களில் மட்டும் கனமழையால் பாதிக்கபட்ட மக்கள் தங்க வைக்கபட்டு உள்ளதாக தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் மாவட்ட ஆட்சியர் இன்னோசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். முகாமில் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகள் போடபட்டு வருவதாகவும், வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். தற்போது பெய்து வரும் கனமழை தொடர்பாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்