ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
x
அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மெஜந்தா நிற கவரில் உள்ள இருநிலை சமன்படுத்திய ஆவின் பால் ஒரு லிட்டர் 34 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. நீல நிற கவரில் உள்ள சமன்படுத்திய பால் ஒரு லிட்டர் 37 ரூபாயில் இருந்து 43 ரூபாயாக உயர்ந்துள்ளது. பச்சை நிற கவரில் உள்ள நிலைப்படுத்திய பால் ஒரு லிட்டர் 41 ரூபாயில் இருந்து 47 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆரஞ்சு நிற கவரில் உள்ள நிறை கொழுப்பு பால் ஒரு லிட்டர் 45 ரூபாயில் இருந்து 51 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. 

"ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு"

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தந்தி டி.வியிடம் பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்.

Next Story

மேலும் செய்திகள்