முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்
x
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முரசொலி அலுவலக வளாகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட கருணாநிதியின் சிலைக்கும் அவர், மலர்தூவி மரியாதை செய்தார். திமுக  பொருளாளர் துரைமுருகன், அக்கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.பிக்கள், தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏக்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்