"ஈழத்தமிழர்களை விடுதலை புலிகளாக சித்தரிக்க அதிமுக முயற்சி" - வைகோ குற்றச்சாட்டு
ஈழத்தமிழர்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்க அதிமுக அரசும், க்யூ பிரிவு போலீசாரும் முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
ஈழத்தமிழர்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்க அதிமுக அரசும், க்யூ பிரிவு போலீசாரும் முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நடுவர் மன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பிரபாகரன் படம் வைத்திருப்பவர்கள், காலண்டர் விற்றவர்கள் எல்லாம் கைது செய்யப்படுவதாகவும், அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் பிரபாகரன் படம் உள்ளதாக அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு சட்ட ரீதியாக தொடர்ந்து போராட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story