முக்கிய பிரமுகர்களுக்கு, ஆளுநர் தேநீர் விருந்து:"மோடியின் சிறப்பான தலைமையில் புதிய இந்தியா..." - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்

மாலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முக்கிய பிரமுகர்களுக்கு, தேனீர் விருந்து கொடுத்தார்.
முக்கிய பிரமுகர்களுக்கு, ஆளுநர் தேநீர் விருந்து:மோடியின் சிறப்பான தலைமையில் புதிய இந்தியா... - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்
x
மாலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முக்கிய பிரமுகர்களுக்கு, தேனீர் விருந்து கொடுத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசு துறை உயரதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன், தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து  நீக்கப்பட்டது பிரதமரால் எடுக்கப்பட்ட தைரியமான முடிவு என்றார். பிரதமர் மோடியின் சிறப்பான தலைமையின் கீழ் புதிய இந்தியா வளர்ந்து வருவதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் தெரிவித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியின் முடிவில், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

Next Story

மேலும் செய்திகள்