பௌர்ணமியன்று கூட்டமின்றி வெறிச்சோடிய சதுரகிரி கோயில்
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 07:57 AM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கடந்த திங்கட்கிழமை  முதல் 4 நாட்களுக்கு கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சதுரகிரி கோயிலில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துகொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், எப்போதும் பவுர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் கோயில், இந்த பவுர்ணமிக்கு கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

சதுரகிரி பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளதா? - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

மதுரை சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை செய்து தரக்கோரி சென்னை திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் இராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

84 views

சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு வனப்பகுதி வழியாக செல்வோரிடம் தீவிர சோதனை

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு வனப்பகுதி வழியாக செல்லும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

501 views

பிற செய்திகள்

கோட்டையில் கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி

வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

36 views

டெல்லியில் சுதந்திர தின விழா கோலாகலம் : தேசிய கொடி ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

35 views

சுதந்திர தின விழா கொண்டாட்டம் : வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

168 views

"செம்மர கடத்தலில் 5,000 தமிழர்கள் கைது" - ஆந்திர சிறையில் வாடுவதாக அதிமுக எம்.எல்.ஏ தகவல்

செம்மர கடத்தலில் கைது செய்யப்பட்ட தமிழக இளைஞர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா சிறையில் வாடி வருவதாக கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

17 views

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு : கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேரின் காவலை வரும் 28 ந்தேதி வரை நீட்டித்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கு : 20 வயது இளைஞருக்கு சிறை

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 20 வயது இளைஞருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

106 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.