நீலகிரி கனமழை: நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்

லகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு 30 கோடி ரூபாயை ஒதுக்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி கனமழை: நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்
x
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 910 பேர் மீட்கப்பட்டு, 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை செய்து தர  உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பகுதியாக சேதமடைந்த ஆயிரத்து 225 குடிசைகளுக்கு தலா 4 ஆயிரத்து 100 ரூபாய் மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசை வீடுகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,  அவர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட 55 இடங்களில் 31 இடங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் அவர் கூறியுள்ளார். சேத விவரங்களை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்