"அத்திவரதர் தரிசன நாள் நீட்டிக்கப்படாது" - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் தரிசன நாள் நீட்டிக்கப் பட மாட்டாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஆகமவிதிப்படி கடந்த காலத்தில் 48 நாட்கள் மட்டுமே காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் தந்தார் என குறிப்பிட்டார், அதே போன்று தற்போதும் 48 நாட்கள் மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்