நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க கோரி ,  பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அது தொடர்பான விசாரணையின் போது, இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு அதை தமிழக அரசு பெற்று கொண்டு விட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை சட்டப்பேரவையில் தெரிவிக்காதது ஏன் என விளக்கமளிக்கும் படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கு மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில்  தகவல் தெரிவிக்கப்பட்டு, நீண்ட விவாதமும் நடத்தப்பட்டதாக கூறினார். மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு 2017 அக்டோபர் முதல் கடந்த மே மாதம் வரை 11 கடிதங்கள் தமிழக அரசு அனுப்பி இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்