அரிவாளுடன் கொள்ளையர்கள் - துணிச்சலுடன் விரட்டிய முதிய தம்பதி...

நெல்லை அருகே அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களை வயதான தம்பதி, துணிச்சலுடன் விரட்டியடித்துள்ளனர்.
x
கடையம் அடுத்த கல்யாணிபுரம் கிராம எல்லையில், வயதான விவசாய தம்பதி சண்முகவேல்-செந்தாமரை, தனியாக வசித்து வருகின்றனர். இவர்களின், வீட்டிற்குள் திடீரென புகுந்த முகமூடி கொள்ளையன், சண்முகவேலுவின் கழுத்தில் துணியைபோட்டு இறுக்கினான். கணவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த மனைவி, கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொள்ளையன் மீது வீசி எறிந்து தாக்கினார். உயிரை காப்பாற்றி கொள்ள, வயதான தம்பதி கொள்ளையர்களுடன் துணிச்சலாக போராடிய பரபரப்பான காட்சிகள் அங்கிருந்த கேமராவின் பதிவாகியுள்ளது. அந்த பரபரப்பு காட்சிகள் வெளியான நிலையில் அந்த தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர். 

எலுமிச்சை விவசாயியை குறிவைத்த கொள்ளையர்கள்...

நெல்லை மாவட்டம் கடையத்தில் வயதான தம்பதிகளின் தனிமையான வீடு, லாபம் ஈட்டும் விவசாயம் உள்ளிட்டவை குறித்து வாட்ஸ் ஆப்-பில் தகவல் பரவியதே கொள்ளையர்கள் வரக் காரணம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.  



Next Story

மேலும் செய்திகள்