போலீஸ் என கூறி மக்களை ஏமாற்றி இளைஞர் கைது
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 02:39 AM
வாக்கி டாக்கியுடன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என கூறி மக்களை ஏமாற்றி, லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்த சென்னை இளைஞர் அரியலூரில் சிக்கியுள்ளார்.
சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் காவலர்களின் நண்பனாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சென்ற ச‌சிக்குமார், தான் ஒரு குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் என்றும் குற்றவாளி ஒருவரை பிடிக்க வந்துள்ளதாகவும் அறிமுகம் செய்துகொண்டு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். போலீஸ் சீருடை, வாக்கி டாக்கியுடன் வந்த‌தால், விடுதி ஊழியர்களுக்கும் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. 

இந்நிலையில், தன் அண்ணன் சுங்க வரி துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறிய ச‌சிக்குமார், அண்ணன் மூலம் குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக கூறி, அங்குள்ள மக்களிடம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் வசூல் செய்துள்ளார். இந்த நிலையில், அவர் மீது சந்தேகம் அடைந்த சிலர் கீழப்பழுவூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க போலீசார், ச‌சிக்குமாரை கைது செய்து சீருடை, தொப்பி, வாக்கி டாக்கி கருவிகளை பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

போலீஸ் உடையில் வாகனங்களை வழிமறித்து வசூல் : திருமங்கலம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

124 views

காவல்நிலைய உதவி ஆய்வாளர் தென்னரசை மாற்ற மக்கள் எதிர்ப்பு

கும்பகோணம் தாலுகா காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த தென்னரசு என்பவர் பட்டுக்கோட்டை காவர் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

1479 views

எஸ்.ஐ. உடையில் மிரட்டிய போலி பெண் போலீஸ் - கைது செய்து தீவிர விசாரணை

நாமக்கல் அருகே காவல் உதவி ஆய்வாளர் உடை அணிந்து பெண் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

663 views

பிற செய்திகள்

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

32 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

181 views

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

41 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

24 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

27 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

696 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.