முகமூடி கொள்ளையர்களை போராடி விரட்டியடித்த முதிய தம்பதியினர்...

கடையம் அருகே வீட்டுக்குள் புகுந்து 5 செயின் பறித்த கொள்ளையர்களை முதிய தம்பதியினர் போராடி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணி புரம் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தனியார் பள்ளி அருகே தோட்டத்துடன் கூடிய வீட்டில் வசித்து வருபவர்  சண்முகவேல். இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இருவரும் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் இருவர் சுற்றுச்சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றுள்ளனர்.  சத்தம் கேட்டு சென்ற சண்முகவேலை துண்டால் கழுத்தை நெறித்துள்ளனர். இதனைக்கண்ட முதியவரின் மனைவி செந்தாமரை கணவனை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது கொள்ளையன் ஒருவன் அரிவாளால் செந்தாமரையை வெட்டி 5 சவரன் நகையை பறித்துள்ளான். இதனையடுத்த கணவன், மனைவி இருவரும் கையில் கிடைத்த சேர் உள்ளிட்ட பொருள்களை எடுத்து கொள்ளையர்களை தாக்கி விரட்டி அடித்தனர். இது தொடர்பாக வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்