கொடிவேரி அணையிலிருந்து நீர் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் மலர்தூவி திறந்து வைத்தார்

கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய பாசன வாய்க்கால்கள் மூலம் அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரை மலர்தூவி திறந்து வைத்தார்.
கொடிவேரி அணையிலிருந்து நீர் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் மலர்தூவி திறந்து வைத்தார்
x
ஈரோடு, கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய பாசன வாய்க்கால்கள் மூலம் அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரை மலர்தூவி திறந்து வைத்தார். 135 நாட்களுக்கு திறக்கப்படும் இந்த தண்ணீரால் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய மூன்று தாலுக்காக்களில் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்கப்பட்டதாகவும், நீர் மேலாண்மைக்கு தேவையான அனைத்து திட்டங்களும் மத்திய அரசு ஒப்புதலுடன் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்