வெங்கய்ய நாயுடு குறித்த ஆவண புத்தகம் : சென்னை விழாவில் வெளியிட்டார், அமித்ஷா

குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு குறித்த ஆவணப் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
வெங்கய்ய நாயுடு குறித்த ஆவண புத்தகம் : சென்னை விழாவில் வெளியிட்டார், அமித்ஷா
x
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து Listening...Learning And Leading என்ற தலைப்பில் அமைந்த அந்த புத்தகத்தை அமித்ஷா வெளியிட, அதனை வெங்கய்ய நாயுடு பெற்றுக் கொண்டார். பின்னர் மேடையில் இருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும், புத்தகத்தின் பிரதி வழங்கப்பட்டது.

"அனைத்து துறைகளில் தமிழகம் முன்னிலை" - வெங்கய்ய நாயுடு

அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் இருப்பதால், புத்தக வெளியீட்டு விழாவை சென்னையில் வைக்கக் காரணம் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசினார். 

"அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடியவர் வெங்கய்ய நாயுடு" - முதலமைச்சர்


மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற ஒரு பாலமாக குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு எப்போதும் உள்ளார் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு குறித்த ஆவணப் புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

"வெங்கய்யா நாயுடுவின் வாழ்க்கை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டு" - அமித்ஷா புகழாரம்


கல்வி பயிலும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யாவின் வாழ்க்கை உள்ளது என, மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளா​ர். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மாநிலங்களவை தலைவராக வெங்கய்யா நாயுடு, சிறப்பாக பணியாற்றியதால் தான், காஷ்மீர் 370 பிரிவு ரத்து செய்யும் மசோதா, எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் - அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு


காஷ்மீரை இரண்டாக பிரிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த நடவடிக்கைகள், பாராட்டுக்குரியது என்று நடிகர் ரஜினி தெரிவித்தார். அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும், கிருஷ்ணர் அர்ஜூனர் போன்றவர்கள் எனவும் ரஜினிகாநத் புகழாரம் சூட்டினார். குடியரசு துணை தலைவவர் வெங்கய்ய நாயுடு, மனித நேயம், மற்றும் அதிக நினைவாற்றல் கொண்டவர் என, நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். 

"விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றது எப்படி?" - வெங்கையா நாயுடு வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டார். முதலில் இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்தை அழைத்த போது, படப்பிடிப்பு உள்ளதால் தன்னால் பங்கேற்க இயலாது என அவர் மறுப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டார், தற்போது, கடவுள் மழையை பெய்யச் செய்து, படப்பிடிப்புக்கு செல்ல முடியாத நிலையை உருவாக்கி, ரஜினிகாந்த்தை இந்த விழாவில் கலந்து கொள்ளச் செய்திருப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்