வேலூர் தேர்தல் - தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர் தேர்தல் - தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி
x
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். இரு வேட்பாளர்களுக்கும் இடையே இழுபறி நீடித்து, பின்னர், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில், வேலூர் தொகுதியில், 8 ஆயிரத்து 290   வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.  தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 4லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகள் பெற்றார்.வேலூர் மக்களவை தொகுதியில் தனித்து களம்கண்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26 ஆயிரத்து 995 வாக்குகள் பெற்றிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்