"மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் தமிழகத்தில் இதுவரை பதிவான மழை அளவில் இது அதிகபட்சம் என்றும் புவியரசன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்