அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
x
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 38வது நாளான இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில், ஆனைகட்டு பகுதியில் வி.ஐ.பி. தரிசன வரிசையில், வைக்கப்பட்டிருந்த போலீசார் சாலை தடுப்புகளில் மின்சாரம் கசிந்துள்ளது. இதனை அறியாத பக்தர்கள் தடுப்புகளில் கை வைக்க, பக்தர்கள் 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து பக்தர்கள் அலற, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார், காயமடைந்த பக்தர்களை மீட்டு கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமிற்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மின்சாரம் கசிவும் உடனடியாக சரி செய்யப்பட்டது. பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்