வெளிமாநில மதுபாட்டில் விற்றவர் கைது : போலீசாரிடம் பிடித்து கொடுத்தவர்கள் மீது தாக்குதல்
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே வெளிமாநில மதுபாட்டில் விற்றவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த மூன்று இளைஞர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே வெளிமாநில மதுபாட்டில் விற்றவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த மூன்று இளைஞர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கல்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயவீரன் என்பவர் வெளிமாநில மது பாட்டில்கள் விற்றதாக கிராமத்து இளைஞர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களே ஜெயவீரனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயவீரனின் மகன்கள், தந்தையை பிடித்துக் கொடுத்த மூன்று பேரை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story