விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை : ஒரு தலை காதல் விவகாரத்தால் கொலை என வாக்குமூலம்

நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டதில் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை : ஒரு தலை காதல் விவகாரத்தால் கொலை என வாக்குமூலம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியை சேர்ந்தவர் புஷ்பாகரன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக இருந்தார். இவரை கடந்த 5ஆம் தேதி வழிமறித்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான சுசீந்திரத்தை சேர்ந்த கிஷோர்குமார் உட்பட 4 பேர் நேற்றிரவு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் புஷ்பாகரனின் உறவுக்கார பெண்ணை கிஷோர் காதலித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் கிஷோரின் அண்ணன் பிரசன்னாவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்