மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் சென்னையில் கொலை - 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது

சென்னை அண்ணாநகரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் சென்னையில் கொலை - 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது
x
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி என்ற பெண் முதல் கணவரை  பிரிந்து வந்து சென்னை அண்ணா நகரில் கிருஷ்ணபகதூர் என்ற இளைஞருடன் கடந்த 6 மாதமாக வாழ்ந்து வந்தார். டாட்டு போடுதல் மற்றும் சேலை விற்பனை தொழில் செய்து வந்த இவர், திடீரென தன் வீட்டு குளியலறையில் பிணமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணையை தொடங்கினர். சிசிடிவியில் ஹரியானாவை சேர்ந்த விகாஷ் குமார் என்ற இளைஞர் பிங்கியின் வீட்டிற்கு வந்து சென்றது பதிவாகியிருந்த‌து. பிங்கியை கொலை செய்துவிட்டு, அவரது செல்போனையும் அந்த நபர் எடுத்து சென்றதை அறிந்த போலீசார், விகாஸ் குமாருக்கு பெண் ஒருவர் மூலம் போலீசார் வலை விரித்தனர். அரியானாவிற்கு தப்பி செல்லும் முயற்சியில் இருந்த விகாஸ்குமார், பெண் ஒருவர் தொடர்பு கொண்டதில் மயங்கி அவர் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் விகாஸ்குமாரை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், பிங்கி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த‌தாகவும், பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டதால் வீட்டில் இருந்த அரிவாள்மனையால் அவரை வெட்டி கொலை செய்து விட்டதாகவும் விகாஸ்குமார் ஒப்புகொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்